அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

அசாதுதீன் ஓவைசி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  சசிகலா அரசியலில் இருந்து விலகிய பின்னர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்த டிடிவி தினகரன், 9-ம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்வோம் என்றும் 10-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அக்கட்சியில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியுடனான அமமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக கட்சி சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அமமுக தலைமையிலான கூட்டணியில் அசாதுதீன் ஒவைசி கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

  அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகமது ரஹமதுல்லா தாயப், அக்கட்சியின் தமிழக தலைவர் டி.எஸ்.வக்கீல் அஹமது ஆகியோரும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  Published by:Sheik Hanifah
  First published:

  சிறந்த கதைகள்