கொரோனாவில் இருந்து மீண்ட பிறகே உயிரிழந்ததால், வசந்தகுமார் உடல் அஞ்சலிக்காக அனுமதி..

ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டாவது மக்கள் பிரதிநிதியாக வசந்தகுமார் ஆவார்.

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகே உயிரிழந்ததால், வசந்தகுமார் உடல் அஞ்சலிக்காக அனுமதி..
வசந்தகுமார் எம்.பி
  • Share this:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என்ற நிலையில், கொரோனாவிலிருந்து வசந்தகுமார் குணமடைந்ததால், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதன்படி, கட்சி நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டதுடன், கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ”இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாது அண்ணாச்சி” - ஜோதிமணி எம்.பி


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவருமான வசந்தகுமாருக்கு கடந்த 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகமானாதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், 70 வயதான அவர், வயது மூப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக நுரையீரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, 10 நாட்களுக்கு மேலாக செயற்சை சுவாசக் கருவி உதவியுடன் கிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6.56 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அனைத்து வகையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கொரோனா பாதிப்புகள் காரணமாக நிலைமை படிப்படியாக மோசமடைந்து உயிரிழந்ததாக மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதும், நுரையீரல் தொற்று காரணமாகவே வசந்தகுமார் உயிரிழந்ததாக, அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டாவது மக்கள் பிரதிநிதியாக வசந்தகுமார் ஆவார்.
First published: August 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading