HOME»NEWS»TAMIL-NADU»as the schools reopened in tamil nadu after 9 months the students came to the schools happily 1 vin

9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் - மகிழ்ச்சியுடன் சென்ற மாணவர்கள்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நண்பர்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவ,மாணவிகள் தெரிவித்தனர்.

9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் - மகிழ்ச்சியுடன் சென்ற மாணவர்கள்!
மாணவர்கள்
  • News18
  • Last Updated :
  • Share this:

தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அரசு வழிகாட்டுதலுடன் திறக்கப்பட்டன. அப்போது பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் தரப்பட்டது.



முன்னதாக பள்ளி வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அரசின் வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.



நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நண்பர்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவ,மாணவிகள் தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்துவது புரியாமல் இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது தேர்வினை சிறப்பாக எழுத உதவியாக இருக்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் கிளவுஸ், மாஸ்க் போன்றவை வைத்துக்கொள்ள அறிவுறுத்தபட்டு இருப்பதாகவும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிகளுக்கு வந்திருக்கும் நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள் வரையபட்டு , கடைபிடிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.



மேலும் விட்டமின் மற்றும் ஜின்க் மாத்திரைகளும் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிடும் படியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also read... நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை - மத்திய கல்வி அமைச்சகம்

சென்னையில் இன்று சிபிஎஸ்இ மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்படவில்லை என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். அந்தப் பள்ளிகள் திறப்பதற்கு பள்ளி நிர்வாகங்கள் வேறு தேதிகளை கேட்டுள்ளதாகவும் கூறினார்.

சென்னை அசோக்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாவட்டத்தில் உள்ள மற்ற 679 பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிகளில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: