தண்ணீருக்காக பல கிலோமீட்டர் தொலைவுக்கு செல்லும் வேலூர் மக்கள்!

குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நகர்ப்பகுதிகளில் செயல்படுத்துவதுபோன்று, கிராமப்பகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தண்ணீருக்காக பல கிலோமீட்டர் தொலைவுக்கு செல்லும் வேலூர் மக்கள்!
தண்ணீர் தட்டுப்பாடு
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
பாலாற்றின் மூலம் விவசாயம் செழித்துவந்த வேலூர் மாவட்டத்திலும் தற்போது குடிநீருக்கே மக்கள் பல ஊர்களைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை, ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பாலாற்றையே இந்தப் பகுதி மக்கள் நம்பியிருந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாலாறு வறண்ட நிலையிலேயே உள்ளது.


இதனால், நிலத்தடி நீரை நம்பி வாழ்க்கை நடத்திவந்த மக்கள், தற்போது, நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால், கடும் தண்ணீர் பஞ்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், தண்ணீருக்காக பல கிராமங்களுக்கும், பல கிலோமீட்டர் தொலைவுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நகர்ப்பகுதிகளில் செயல்படுத்துவதுபோன்று, கிராமப்பகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடுமையான குடிநீர் பஞ்சத்தின் காரணமாக, குளத்தில் தேங்கிக்கிடக்கும் நீரை வேறுவழியின்றி பயன்படுத்தும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Also see...

First published: June 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading