Home /News /tamil-nadu /

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக தலை வைத்து கூட படுக்க முடியாது.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக தலை வைத்து கூட படுக்க முடியாது.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று கூறினார்கள், ஆனால் கோயில்களுக்கு அதிக அளவில் கும்பாபிஷேகம் செய்ததும், அர்ச்சகர்களுக்கு நிதி உதவி அளித்ததும் திமுக ஆட்சியில்தான் என்று அவர் கூறினார்.

இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று கூறினார்கள், ஆனால் கோயில்களுக்கு அதிக அளவில் கும்பாபிஷேகம் செய்ததும், அர்ச்சகர்களுக்கு நிதி உதவி அளித்ததும் திமுக ஆட்சியில்தான் என்று அவர் கூறினார்.

இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று கூறினார்கள், ஆனால் கோயில்களுக்கு அதிக அளவில் கும்பாபிஷேகம் செய்ததும், அர்ச்சகர்களுக்கு நிதி உதவி அளித்ததும் திமுக ஆட்சியில்தான் என்று அவர் கூறினார்.

திமுக இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் தலை வைத்து படுக்க முடியாது என சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சிதம்பரம் நகர்மன்றத் தேர்தலில் 33 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிதம்பரம் தெற்கு வீதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 8 மாத காலத்தில் 10 கோடி தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன. அதனால்தான் மூன்றாவது அலை ஏற்பட்டபோதும் பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை.

8 மாதத்திற்கு முன்பு திமுக அரசு பொறுப்பேற்கும் போது, தமிழகத்தில் கொரோனா தாண்டவமாடியது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருந்துகள் இல்லை என்ற நிலையில் ஆட்சி பொறுப்பேற்று கடுமையாகப் போராடி இரண்டே மாதத்தில் கொரோனா கட்டுபடுத்தப்பட்டது. கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று  ஆய்வு செய்த ஒரே முதல்வர் இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

Read More : காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு

நேற்று தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பற்றி பேசியிருக்கிறார். தேர்தல் வந்தால் உதயநிதி ஸ்டாலின் வருவார், வாக்குறுதிகளை அள்ளிக் கொடுப்பார். பின்னர் காணாமல் போய்விடுவார் என்று. அவர் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

என்னை எனது வீட்டில் கூட தேட மாட்டார்கள். ஆனால் எடப்பாடி தேடுகிறார். என் மீது அவருக்கு அவ்வளவு அக்கறை. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண 4 ஆயிரம் ரூபாய் அளித்தவர்  முதல்வர் ஸ்டாலின். பெண்களுக்கு இலவச பஸ் வசதி, பெட்ரோல் விலை ரூ.3, ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு போன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் ஸ்டாலின்.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயன் அடைந்தார்கள். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர். நம்மை காப்போம் 48 திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்கி ஏராளமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Must Read : இந்தியாவின் அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக களமிறங்கியுள்ளன - தி.வேல்முருகன் காட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஆட்சியில் போராடினார்கள். அவர்களுக்கு அப்போது நான் ஆதரவு அளித்து அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த ஆண்டு அவர்களது கல்வி கட்டணம் அரசு கல்லூரிகளைப்போல் குறைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதி மக்களுக்கு ரூ 127 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும். ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இடிக்கப்பட்டு சிதம்பரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடுகள் கட்டித்தரப்படும்.

இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று கூறினார்கள். ஆனால் கோயில்களுக்கு அதிக அளவில் கும்பாபிஷேகம் செய்ததும், அர்ச்சகர்களுக்கு நிதி உதவி அளித்ததும் திமுக ஆட்சியில்தான். சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜக தலை வைத்து கூட படுக்க முடியாது என்று கூறினார். பாஜகவுக்கு திமுக சிம்ம சொப்பனமாக தெரிகிறது. வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: DMK, Local Body Election 2022, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி