தமிழகத்தில் முழு ஊரடங்கு? : இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது!

தமிழகத்தில் முழு ஊரடங்கு? : இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது!

மாதிரிப்படம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 13,776 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 95,048 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரங்கு அமலில் உள்ளது. மேலும், ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனையில் தமிழக அரசு சார்பாக தலைமைச் செயலாளர் பங்கேற்றார்.  இந்த ஆலோசனைக்கு பின், தமிழக முதலமைச்சர் தலைமை செயலாளர், அரசு ஆலோசகர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரவு நேர ஊராடங்கு நேரத்தை அதிகாரிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும், இன்று மாலை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,66,10,481ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,19,838 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,38,67,997 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 25,52,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை கொரோனாவுக்கு நாடு முழுவதும் 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர். இதுவரை மொத்தம் 13,83,79,832 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

UPDATE: ஏப்ரல் 26 முதல் சலூன், தியேட்டர், பெரிய கடைகள், மால்கள் திறக்க அனுமதி இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை அறிய இணைந்திருங்கள்
Published by:Arun
First published: