மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள்!

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

 • Last Updated :
 • Share this:
  பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சில கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்தனர். இதில், முதல் தலைமுறை பட்டதாரிகள் 48 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு தகுதிபெற்றனர்.

  முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியுள்ளது. சிறப்புப் பிரிவினரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6ஆயிரத்து 915 இடங்கள் இருந்தும், 141 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

  கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியைத் தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று அரசுக் கல்லூரியை தேர்வு செய்த மாணவர் தனவேலை அமைச்சர் பாராட்டினார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், மாணவர்கள் சேர்க்கை சரியாக இல்லையென சில கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியாத கல்லூரிகள் கூடுதல் மாணவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.

  சிறப்புப் பிரிவினரில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு நாளையும், விளையாட்டு வீரர்களுக்கு நாளை மறுநாளும் நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளை முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ளது.

  மேலும் பார்க்க:
  Published by:Ilavarasan M
  First published: