அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கில் இறுதித்தீர்ப்பு வருவதற்க்கு முன்பே வெற்றி என்பதா? கிருஷ்ணசாமி கண்டனம்

கிருஷ்ணசாமி

தீர்ப்பு நகலை முழுவதையும் படித்துப் பார்க்காமல் வழங்கப்படாத தீர்ப்புக்கு வாழ்த்துகளும் வரவேற்புகளுமா என்று அரசியல் கட்சிகளுக்கு கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  அருந்ததியினருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே வெற்றி என, அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவதா என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

  பட்டியிலின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை  பிரித்து வழங்க புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு எதையும் அளிக்காமல், பெரிய அமர்வுக்கு மாற்றிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

  எனவே, அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்தது கருத்து தான் என்றும், தீர்ப்ப அல்ல என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.  ஆனால், இந்த விவகாரத்தில் தீர்ப்பு நகலை முழுவதையும் படித்துப் பார்க்காமல் வழங்கப்படாத தீர்ப்புக்கு வாழ்த்துகளும் வரவேற்புகளுமா என்று அரசியல் கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

   
  Published by:Sankar
  First published: