Home /News /tamil-nadu /

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து தனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை - அருந்ததி ராய்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து தனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை - அருந்ததி ராய்

அருந்ததி ராய்

அருந்ததி ராய்

நீக்கப்பட்ட புத்தகத்துக்கு பதிலாக, கிருஷ்ணன் என்பவர் எழுதிய My native land என்ற புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

    ஏபிவிபி அமைப்பின் எதிர்ப்பை தொடர்ந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து, எழுத்தாளர் அருந்ததி ராயின், ''walking with the Comrades'' புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

    பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் நக்சல்களின் வாழ்க்கை, அவர்களது ஆயுதப்போராட்டம் ஆகியவை குறித்து நேரடியாக பேட்டி கண்டதுடன், அதை ''walking with the Comrades'' என்ற புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கிலத்துறையின் 3வது செமஸ்டரில், கடந்த 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

    இந்நிலையில், இப்புத்தகம் நக்சல்களின் செயல்பாடுகளை உயர்வாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் முறையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. புத்தகத்தை உடனடியாக பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என துணை வேந்தரிடம், ஏபிவிபி மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். நீக்கப்பட்ட புத்தகத்துக்கு பதிலாக, கிருஷ்ணன் என்பவர் எழுதிய My native land என்ற புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

    இதனிடையே, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து தனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என்று அருந்ததி ராய் விளக்கம் அளித்துள்ளார். மேலும், 'பாடத் திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் எனக்கு தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், இலக்கியங்கள் தொடர்பாக இப்போதைக்கு அரசு காட்டும் அலட்சியப் போக்கு மிகப் பாதகமானது எனத் தெரிவித்தார். தான் ஒரு எழுத்தாளர் மட்டுமே என்றும், தனது பணி எழுதுவதே தவிர பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய போராடுவது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Manonmaniam Sundaranar University

    அடுத்த செய்தி