ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரசிகர்களுக்கு அருண் விஜய் கொடுக்க போகும் ட்ரீட் யானை டீசர்!

ரசிகர்களுக்கு அருண் விஜய் கொடுக்க போகும் ட்ரீட் யானை டீசர்!

அருண் விஜய்யின் படத்தை எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் யானை டீஸரை வைத்து திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

 • 1 minute read
 • Last Updated :

  ஹீரோவாக நடித்த போது கிடைக்காத பெயரும், புகழும் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பிறகு அருண் விஜய்க்கு கிடைத்தது. குற்றம் 23, மாஃபியா, தடம் படங்கள் அவரை தனி ஹீரோவாக நிலைநிறுத்தின. இதில் தடம் முக்கியமான படம்.

  அருண் விஜய்யின் ரசிகர்கள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. அவரது படங்களை கட்அவுட் வைத்து, பேனர் கட்டி, போஸ்டர் ஒட்டி, தாரை தப்பட்டடைகளுடன் ரசிகர்கள் வரவேற்கிறார்கள். சோகம் என்னவென்றால் அவர் நடித்து முடித்த  படங்கள் கூட வெளியாகாமல் இருப்பதுதான். 2020 பிப்ரவரியில் மாஃபியா வெளியானது. இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. அடுத்து ஒருபடம்கூட வெளியாகவில்லை. இத்தனைக்கும் ஓ மை டாக், பார்டர், அக்னி சிறகுகள் படங்கள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. பார்டர் நவம்பர் 17 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிப்போனது.

  இதையும் படிங்க:  அமீரின் முத்தத்தால் பாவ்னிக்கு வந்த சிக்கல்.. சர்ச்சைக்கு முடிவு கட்ட நினைக்கும் ரசிகர்கள்!

  இந்தப் படங்கள் தவிர பாக்ஸர், சினம் என வேறு இரு படங்களும் உள்ளன. அவற்றின் நிலையும் தெரியவில்லை. இந்தப் படங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டது யானை. ஹரி இயக்கும் இந்தப் படம்தான் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கப் போகிறது. யானை படத்தின் டீஸரை டிசம்பர் 23 வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். படம் அடுத்த வருடம் ஏப்ரலில் திரைக்கு வரும் என்கிறார்கள்.

  இதையும் படிங்க:  யுவன் இசையில் ஹீரோவாகும் கோமாளி பட இயக்குநர்!

  அருண் விஜய்யின் படத்தை எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் யானை டீஸரை வைத்து திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: