முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் 4 மாதம் நீட்டிப்பு!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் 4 மாதம் நீட்டிப்பு!

நீதிபதி ஆறுமுகசாமி

நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்தாண்டு செப்டம்பர் 25-ம் தேதி அமைக்கப்பட்டது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்தாண்டு செப்டம்பர் 25-ம் தேதி அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எனினும், விசாரணை முடிவடையாததால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்தக் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்னும் விசாரணை முடிவடையாததால், மேலும் 4 மாத கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆணையத்தின் விசாரணைக்காக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று நேரில் ஆஜரானார்.

First published:

Tags: Appolo Hospital, Arumugasamy commission, Jayalalithaa, Jayalalithaa Dead