முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட கட்டுப்பாடு!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட கட்டுப்பாடு!

நீதிபதி ஆறுமுகசாமி

நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் உரிய அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது என்று ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (டிசம்பர் 5) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகான அவரது திடீர் மறைவு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவின் உதவியாளர்கள் முதல் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வரை பல்வேறு நபர்களை விசாரித்தது. மேலும் பலரை விசாரித்து வருகிறது.

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் உரிய அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது என்று ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்த ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதாவின் மரணம் குறித்த தகவல்களை செய்தி வடிவிலோ, தொடராகவோ, விவாதமாகவோ ஆணையத்தின் உரிய அனுமதியின்றி பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ வெளியிடக் கூடாது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also watch

First published:

Tags: Arumugasamy commission, Jayalalithaa