முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு சம்மன்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு சம்மன்!

நீதிபதி ஆறுமுகசாமி

நீதிபதி ஆறுமுகசாமி

கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அவரது பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமியும் உடனிருந்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் ஆஜராகக் கோரி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அந்த வகையில் ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமியை விசாரிக்க ஆணையம் சார்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், அச்சமயத்தில் அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்புப் பணியில் இருந்ததால் வேறோரு நாளில் ஆஜராவதற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பெருமாள்சாமி விசாரணைக்கு நாளை (டிசம்பர் 11) நேரில் ஆஜராகக்கோரி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது பெருமாள்சாமியும் உடனிருந்தார்.

எனவே அன்று நடந்த நிகழ்வுகள் குறித்தும், ஏற்கெனவே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறிதான் சி.சி.டி.வி. கேமராக்களை அணைத்தோம் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் விளக்கம் குறித்தும் அவரிடம் கேள்விகளை ஆணையம் எழுப்பவுள்ளது.

மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரும் 17-ம் தேதிக்குள் ஆஜராகக் கோரி அவருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Also watch

First published:

Tags: Jayalalithaa