முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

பீட்டர் ஜோன்ஸ்

பீட்டர் ஜோன்ஸ்

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கொடநாடு எஸ்டேட் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸுக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பட்டுள்ளது. அவரிடம் கொடநாடு சொத்து விபரங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு நபர்களிடம் விசாரித்து வருகிறது. இந்த சூழலில் கொடநாடு எஸ்டேட் தொடர்பாக அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கொடநாடு எஸ்டேட் 1994 வரை பீட்டர் ஜோன்ஸ் வசம் இருந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா தரப்பு தன்னை அடிஆட்களை வைத்து மிரட்டி ரூ.9 கோடிக்கு விற்பதாக தெரிவித்த சொத்தை ரூ.7 கோடிக்கு வாங்கினார்கள் என்று பீட்டர் ஜோன்ஸ் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா இறப்புக்குப் பின்பு, கொடநாடு எஸ்டேட்டை பெறுவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் ஊடகங்களிடம் அவர்  தெரிவித்திருந்தார்.

இதனால் கொடநாடு சொத்து யாருடைய பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட கேள்விகளை எழுப்ப ஆணையம் திட்டமிட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்பு கொடநாடு வங்கி மேலாளரிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கொடநாடு எஸ்டேட் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்றது. அப்போது, கொடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி பத்திரப்பதிவு அலுவலரை அழைத்து யார் பெயரில்  பத்திரப்பதிவு நடைபெற்றது என்பது உள்ளிட்ட கேள்விகளை பூங்குன்றனிடம் ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published:

Tags: Jayalalithaa, Kodanadu estate