Home /News /tamil-nadu /

சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை - ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி

சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை - ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி

விசாரணை அறிக்கையை வெளியிடுவதா கூடாதா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம். 608 பக்கங்கள் கொண்ட அந்த விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி வழங்கினார்.

    இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா என்பதை பற்றி தான் சொல்ல முடியாது எனவும் ஆணையத்தின் அறிக்கை குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனவும் கூறினார்.  மேலும் அப்பல்லோ அறிக்கை வெளியானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அது ஒருவர் செய்த விளம்பர உத்தி எனக் கூறினார். அறிக்கையை வெளியிடுவதா கூடாதா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

    இதையும் வாசிக்க:  ‘அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ போலியானது’ – மதுரை பாஜக தலைவர் விளக்கம்; காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

    அப்பல்லோ நிர்வாகம் விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை என்பதால் விசாரணைக்கு ஆஜராவதில் உடன்பாடு இல்லை என எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டு அவருக்கு விலக்கு அளித்ததாக தெரிவித்தார்.



    இதனையடுத்து ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமானதற்கு தன்னை காரணம் சொல்கின்றனர், அது சரி அல்ல எனவும் கூறினார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில்  2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Arumugasamy commission

    அடுத்த செய்தி