முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பன்னீர் செல்வத்துக்கு 6-வது முறையாக விசாரணை ஆணையம் சம்மன்

ஓ.பன்னீர் செல்வத்துக்கு 6-வது முறையாக விசாரணை ஆணையம் சம்மன்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

எதன் அடிப்படையில்  ஓ.பன்னீர் செல்வம் சந்தேகங்களை எழுப்பினார் என்று அவரிடம் சரமாரி கேள்வி எழுப்ப சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 6-வது முறையாக நேரில் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதன்முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 தேதி ஆஜராக ஆறுமுகசாமிஆணையம் சம்மன் அனுப்பியது.

அதை தொடர்ந்து ஜனவரி 8, 23, பிப் 5, என்று நான்கு முறை சம்மன் அனுப்ப பட்டும் அவர் ஆஜராகவில்லை.

சம்மன் அனுப்பியும் நான்கு முறை ஆஜராகாமல் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிப் 19-ம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர்  ஆஜரகவில்லை. இந்த நிலையில் வரும் 28-ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பபட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஓ.பன்னீர் செல்வம் எழுப்பி இருந்தார். அதில் குறிப்பாக, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள், வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லாது ஏன், அமைச்சர்கள் நேரில் பார்க்க முடியாத நிலை போன்ற பல சந்தேகங்களை அவர் கேட்டிருந்தார்.

இதுவரை நடைபெற்ற விசாரணையில் சசிகலா தரப்பு ஆதாரங்களை கேட்டுள்ளதால், எதன் அடிப்படையில்  ஓ.பன்னீர் செல்வம் சந்தேகங்களை எழுப்பினார் என்று அவரிடம் சரமாரி கேள்வி எழுப்ப சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளது.

Also Watch: அதிமுக ஊழல் கட்சியா? பதிலளிக்க மறுத்த அன்புமணி | Full Speech

First published:

Tags: ADMK, Arumugasamy commission, Jayalalithaa, O Panneerselvam, OPS