முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சசிகலாவின் உறவினர் 5-வது முறையாக ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

சசிகலாவின் உறவினர் 5-வது முறையாக ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

மருத்துவர் சிவக்குமார்

மருத்துவர் சிவக்குமார்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சசிகலாவின் உறவினரும், ஜெயலலிதாவின் பிரத்யேக மருத்துவருமான சிவகுமார் விசாரணைக்காக 5-வது முறையாக ஆஜராகக் கோரி அவருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஜெயலலிதாவின் சமையலர், உதவியாளர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்தது.

மேலும் பலரையும் விசாரிக்க அந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர் சிவகுமார் விசாரணைக்காக 5-வது முறையாக ஆஜராகக் கோரி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிவகுமார் ஏற்கெனவே ஜனவரி 8, மார்ச் 14, மே 2, மே 26 ஆகிய 4 நாட்கள் ஆஜரானார். அப்போது, ஆணையத்தின் தரப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குறித்த விபரம், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளின் விபரம், அவற்றில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டும் என்று சிவகுமாருக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Arumugasamy commission, Doctor Sivakumar, Jayalalithaa, Jayalalithaa Dead, Sasikala