Home /News /tamil-nadu /

ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்?

ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்?

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

Jayalalithaa Death Case : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னிர்செல்வம் வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்போலோ மருத்துவர்கள் மூன்று பேரிடம் இன்று குறுக்கு விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது மருத்துவர் மதன்குமாரிடம், டிசம்பர் 2016 ஆம் ஆண்டு 04 மற்றும் 05 ஆம் தேதி அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக ராஜா செந்தூர் பாண்டியன் கேள்வி எழுப்பினர், 04/12/2016 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கார்டியக் அரஸ்ட் ஏற்பட்டதாகவும், அதற்குரிய உயிர்காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் உரிய முறையில், தகுந்த நேரத்தில் அளிக்கப்பட்டதாக மதன் குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து மருத்துவர் ரவிச்சந்திரனிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாக போயஸ் கார்டனில் அளித்த சிகிச்சை தொடர்பான கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மருத்துவர் ரவிச்சந்திரன்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கால் மற்றும் கைகளில் ஏற்பட்ட தோல் அலர்ஜி தொடர்பாக இரண்டு முறை சந்தித்து சிகிச்சை அளித்ததாகவும், அதன் பின்னர் மருத்துவர் சிவகுமார் வேண்டுகோளிற்கு ஏற்ப மருத்துவர் பார்வதி பத்மநாபனை தோல் சம்மந்தமான அலர்ஜிக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்ததாக  தெரிவித்தார்.

மேலும், பார்வதி சிகிச்சை அளித்த காலகட்டத்தில், உடல் சோர்வு, நீரிழிவு நோய் மற்றும் நடப்பதற்கு சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் தனக்கு இருப்பதாக ஜெயலலிதா, மருத்துவர் பார்வதியிடம் கூறியதை தன்னிடம் மருத்துவர் பார்வதி பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.

அப்போது, என்ன வகையான மருந்துகள், எத்தனை காலகட்டத்திற்கு மருத்துவர் பார்வதி ஜெயலலிதாவிற்கு வழங்கியதாக எய்ம்ஸ் மருத்துவ குழு, மருத்துவர் ரவிச்சந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.
என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டது, எத்தனை காலகட்டத்திற்கு கொடுக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது எனவும் ஆனால் ஓரால் ஸ்டெராய்டு (short term - Oral steroids) மருந்தினை பரிந்துரைத்ததாக  பகிர்ந்து கொண்டார் எனவும் எய்ம்ஸ் மருத்துவ குழுவிற்கு பதில் அளித்தார்.

Read More : கண்களைக் கட்டிக் கொண்டு மகளிர் தினத்தில் சாதனை : அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

இதே போல் மருத்துவர் மீனாட்சி சுந்தரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்,
ஏற்கனவே மருத்துவர்களை விசரித்துள்ள நிலையில், சில விளக்கம் கேட்கவே 11 மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Must Read : நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.. சட்டத்தின் நிலை என்ன? - ராமதாஸ் கேள்வி

நேற்றும் இன்றும் வர முடியாத மூன்று மருத்துவர்களுக்கு வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ குழுவின் சந்தேகத்தை விளக்குவதற்கு மருத்துவர் பார்வதிக்கும் 15ஆம் தேதி விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்றார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்  ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது எனவும் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

இந்நிலையில், வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்டி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு 9ஆவது முறையாக சம்மன் அனுப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Arumugasamy commission, Jayalalithaa, O Panneerselvam, OPS

அடுத்த செய்தி