• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா மரணம்: விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் : ஆறுமுகசாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

ஜெயலலிதா மரணம்: விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் : ஆறுமுகசாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி

115 சாட்சிகளை விசாரித்திருப்பதாகவும், இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே ஆணையம் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் தகவல்.

  • Share this:
    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் ஆறுமுகசாமி ஆணையம் இடைக்காலத் தடையை நீக்கினால், விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசாரணையில் இருந்து விலக்கு கோரிய அப்போலோ வழக்கும் அடுத்த வாரம் விரிவாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், தங்களுக்கு இந்த வழக்கில் இருந்து விலக்கு வேண்டும். ஏனென்றால் நாங்கள் மருத்துவர்கள் தான், எங்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. மருத்துவ வல்லுனர்கள் யாராவது கேட்டால் நாங்கள் சொல்ல முடியும். எனவே எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கனே 115 சாட்சிகளை விசாரித்திருப்பதாகவும், இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே ஆணையம் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும், தடையை நீக்கினால் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்றும் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார். இதை கேட்டு பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை அடுத்த வாரம் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அப்போது அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2019ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஜெயலலிதா மரணம், தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்தும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

    Must Read : பேருந்துகளில் கஞ்சா கடத்துவதை தடுக்க, பயணிகளை பரிசோதிக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு

    இத்த மனு தொடர்ச்சியாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: