ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’மாடியில் மயங்கிய ஜெயலலிதா.. தாங்கிப்பிடித்த சசிகலா’ - விசாரணை ஆணைய அறிக்கை சொன்னது என்ன?

’மாடியில் மயங்கிய ஜெயலலிதா.. தாங்கிப்பிடித்த சசிகலா’ - விசாரணை ஆணைய அறிக்கை சொன்னது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன்?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளது.

    2ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு சிகிச்சை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தனது வீட்டின் முதல் மாடியில்இருந்து படுக்கை அறைக்கு வரும்போது ஜெயலலிதா மயங்கி விழுந்தார். அப்போது அவரை சசிகலா தாங்கி பிடித்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    அதில், ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இந்த விசாரணையில் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என தெரிவித்துள்ளனர்.

    ALSO READ | '2 நாள் வேண்டாம்.. நாளைக்கு வரட்டும்' - அதிமுகவுக்கு ஆதரவாக சபாநாகரிடம் குரல் கொடுத்த துரைமுருகன்!

    ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4ம் தேதியே அவர் இறந்துவிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த எல்லாமே மர்மமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    மருத்துவர்களின் பரிந்துரையின் படி ஜெயலலிதாவுக்கு 3 நாட்களுக்கு முன்பே பாராசிட்டமல் கொடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால், வி.கே. சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் , முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், மருத்துவர் ஆபிரகாமிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Arumugasamy commission, Jayalalitha, V K Sasikala, VK Sasikala