ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மயங்கிய ஜெயலலிதா.. 4 பேர் குற்றவாளிகள்.. பல திடுக் தகவல்களை சொன்ன ஆணையம்! முழுத் தகவல்!

மயங்கிய ஜெயலலிதா.. 4 பேர் குற்றவாளிகள்.. பல திடுக் தகவல்களை சொன்ன ஆணையம்! முழுத் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஜெயலலிதா உயிரிழந்த தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் 608 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  அதில், ஜெயலலிதாவுக்கான சிகிச்சை குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், பல கேள்விகளையும், தகவல்களையும் முன்வைத்துள்ளனர்.

  ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு சிகிச்சை பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
  மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன்?
  ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை தெரியப்படுத்தவில்லை.
  மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூன்று நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்தது.
  சசிகலாவின் உறவினர் சிவக்குமார் பரிந்துரைப்படி பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டார்.
  ஜெயலலிதாவுக்கு இதயத்தில் வெஜிடேஷன் டிஸ்டாலிக் டிஸ்ப்ச்ஷன் இருந்தது.
  தனது வீட்டில் முதல் மாடியில் குளியல் அறையில் இருந்து படுக்கைக்கு வரும்போது ஜெயலலிதா மயங்கினார்.
  மயங்கிய ஜெயலலிதாவை உடன் இருந்த சசிகலா தாங்கி பிடித்தார்.
  ஜெயலலிதா உயிரிழந்த தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார்.
  Published by:Anupriyam K
  First published:

  Tags: ADMK, Arumugasamy commission, Jayalalitha