கோவையில்,
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், நான்கு ஆண்டுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருந்தால் அ
திமுக வெற்றி பெற்றிருக்கும் என்றும்
தேனியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
சசிகலா-தினகரன் இணைப்பு குறித்து பேசியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அம்மா (ஜெயலலிதா) எனக்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பைக் கொடுத்தார்கள். இந்த முறை எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நான் ஓய்வாக இருந்துவிட்டேன் என்று கூறினார்.
மேலும், அதிமுக நூறாண்டு காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும் என்று கூறிய அவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கட்சி வளரும். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பேரும் (ஓபிஎஸ்-இபிஎஸ்) வழிநடத்தியும் கட்சி வளரவில்லை. சசிகலா அல்லது தினகரன் தலைமையில் அதிமுக செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.
அதிமுக தோல்விக்கு காரணம் அனைவரும் தனித்தனியாக இருந்ததே ஆகும். இந்நிலையில், சசிகலா இணைப்புக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பினார்.
Must Read : சசிகலா, தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும்: ஓ.பி.எஸ்ஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்- அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
தொடர்ந்து பேசிய அவர், நான் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை இதுவரை தனிப்பட்ட விதமாக நேரில் கூட பார்த்தது இல்லை. தோல்வியுற்ற கவுன்சிலர்கள் என்னிடம் பேசுகின்றனர் வேதனை தெரிவிக்கின்றனர். கட்சி ஒன்றிணையவில்லை என்றால் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.