ஆருத்ரா தரிசனம் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: சித்திரை முதல் பங்குனி வரை பலவிதமான பண்டிகைகளை நாம் கொண்டாடி வருகிறோம். கோவில்களில் உற்சவம் நடத்துகிறோம். அதில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடத்தப்படும் அபிஷேக்கமும் உற்சவமும் சிறப்பு வாய்ந்தது. வேதங்களில் நட்சத்திர சூத்திரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாதிரை நட்சத்திரம் பற்றி மிக சிறப்பாக கூறப்பட்டுள்ளது. அதில் சிவபெருமானும் திருவாதிரை நட்சத்திர தேவதையும் சேர்ந்து மக்களுடைய தோஷங்களையும் பாவங்களையும் போக்கி ஐஸ்வர்யத்தை அளிக்க வேண்டி பிராத்தனை செய்யப்படுகிறது.
திருவாதிரை என்று சொல்லக்கூடிய அந்த நட்சத்திரம் மார்கழி மாதத்தில் வருகிறது. மார்கழியில் 2 முக்கியமான பண்டிகைகள் வருகின்றன. ஒன்று வைகுண்ட ஏகாதசி மற்றொன்று திருவாதிரையாகும். இந்த 2 பிரசிதமான பண்டிகைகளும் மார்கழியில் வருவது மிகவும் சிறப்பு. காரணம் வைகுண்டா ஏகாதசி பெருமாளுக்குரியது. திருவாதிரை சிவனுக்குரியது.
மேலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தமிழில் திருவாதிரை நட்சத்திரத்தை தான் வடமொழியில் ஆருத்ரா என்று சொல்லுவார்கள். இந்த திருவா நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று அதிகாலையில், சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். மேலும் ஆக்கல், காத்தல், அருளலுதல், மறைத்தல், அழித்தல் இந்த ஐந்தொழிலை செய்யக்கூடிய பஞ்சாக்ஷர நாமத்தை கொண்ட சிவபெருமானை, நடராஜர் ரூபத்தில் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நாம் தரிசனம் செய்வது மிக சிறப்பு.
சிவபெருமானின் பஞ்சசபைகளிலும் இன்று மகா அபிஷேகம் நடைபெற்றது. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திர சபை என நடராஜர் நடனமாடும் பஞ்சபைகளிலும் இன்று ஏராளமான பக்தர்கள் ஆருத்ரா அபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். இந்த சபைகள் மதுரை, நெல்லை, குற்றாலம், சிதம்பரம், திருவாலங்காடு என அமைந்துள்ளது. இந்த 5 சபைகளில் விஷேசமான அர்ச்சனைகளை செய்து அபிஷேகம் நடத்தி வணங்கி வருகிறோம்.
பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு சென்று, நீர், பால், பஞ்சாமீர்தம், சந்தனம் என பலவிதமான அபிஷகங்களை மனதார பார்த்து வழிபட வேண்டும். தீபாராதனையையும் கண்டு களித்தல் சிறப்பு. ஆலயம் தொழுவது சாளமும் நன்று என்ற பழமொழிக்கேற்ப தொன்மையான ஆலயங்களை தூய்மையாக பராமரித்து, மேன் மேலும் ஆன்மீக வளர்ச்சியை வளக்க வேண்டும். சிவனை வணங்க வேண்டும். வில்வ மரங்கள் நட வேண்டும்.
தமிழகத்தில் சிவனுக்கு பலவிதமான ஆலகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பை கொண்டுள்ளது அவற்றில் சிறப்பான மிகவும் தொன்மையான கோயிலான உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியாக வீற்றிருக்கும் மரகத நடராஜர் சந்நிதி சிவபெருமானுக்குரிய தலமாகும்’ இவ்வாறு கூறினார்.
மேலும் படிக்க... ராமநாதபுரம் : உத்தரகோசமங்கை ஆலயத்தில் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.