சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..

ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 • Share this:
  கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதிக்கு எதிர்புறத்தில் உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியினை ஏற்றி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பக்தர்கள் பங்கேற்றனர்.

  வருகின்ற 29-ஆம் தேதி தேரோட்டமும் 30-ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

  அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..

  குறிப்பாக ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்பதற்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சிதம்பரம் நகர் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் வெளியூர் ஆட்களை தங்க வைப்பதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா தேர் தரிசன விழா டிராக்டர் மற்றும் ஜேசிபி உதவியுடன் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: