ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Artist S Elayaraja | தத்ரூபமான ஓவியங்களால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர் மறைந்த ஓவியர் இளையராஜா

Artist S Elayaraja | தத்ரூபமான ஓவியங்களால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர் மறைந்த ஓவியர் இளையராஜா

Artist S Elayaraja | தத்ரூபமான ஓவியங்களால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர் மறைந்த ஓவியர் இளையராஜா

தத்ரூபமான ஓவியங்களால் பலரையும் வியப்பில் ஆழ்த்திய பிரபல ஓவியர் இளையராஜா, கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 43.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செம்பியவரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. மிக நுட்பமான மற்றும் நேர்த்தியான ஓவியங்களை வரையும் அசாத்தியமான ஓவிய கலைஞர். குறிப்பாக பெண்களை மிகவும் அழகாக தத்ரூபமாக வரைவதில் வல்லவர் இளையராஜா. இவரது ஓவியங்களை பார்க்கும் போது ஓவியமா அல்லது புகைப்படமா என்று சந்தேகப்பட கூடிய அளவுக்கு துல்லியமாக வரையும் திறமை கொண்ட அசாத்தியமான படைப்பாளி.

  திராவிடப் பெண்கள் என்ற தலைப்பில் இவர் வரைந்த அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் அமர்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களின் குணங்களை மிகத் தத்ரூபமாக ஓவியத்தின் வழியே வெளிப்படுத்தியவர் இளையராஜா.

  பிரபல வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளில் இவரது ஓவியம் இடம்பெறும். எழுத்தாளர்களின் கதையோடு இவரின் ஓவியமும் சேர்ந்து கதைக்கான முழுமையை வாசகரால் உணர முடியும்.

  இளையராஜாவின் ஓவியங்களில் ஒன்று

  கடந்த சில நாட்களுக்கு முன் தனது சகோதரி மகளின் திருமணத்துக்காக கும்பகோணம் சென்று சென்னை திரும்பிய அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மாரடைப்பு காரணமாக ஓவியர் இளையராஜா காலமானார்.

  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனித்துவமான ஓவியங்களால் கவனத்தை ஈர்த்த இளையராஜாவின் மறைவு வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கலைகளின் வழியாக ஓவியர் இளையராஜா காலம் கடந்து வாழ்வார் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இயக்குநர்கள் பார்த்திபன், பா. ரஞ்சித், நவீன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க... Sasikala | ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Painting