ஓவியர் இளையராஜா மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஓவியர் இளையராஜா மறைவு - முதல்வர் இரங்கல்

தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

 • Share this:
  கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஓவியர் இளைஞராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓவியர் இளையராஜா (43). கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர் இளையராஜா. இவரது தனித்துவமிக்க ஓவியங்கள் இந்திய அளவில் மிகவும் பிரபலாமானது.

  இதனிடையே, இளையராஜாவுக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்படவே சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் இளையராஜா உயிரிழந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  அதில், தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

  அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார் என்று அவர் பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: