Home /News /tamil-nadu /

பெயின்டை உடலில் ஊற்றி, படுத்து உருண்டு உதயநிதி படம் வரைந்த ஆசிரியர்

பெயின்டை உடலில் ஊற்றி, படுத்து உருண்டு உதயநிதி படம் வரைந்த ஆசிரியர்

சமீபத்தில், வாயில் பிரஷை கொண்டு கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் படங்களை வரைந்தார். இந்த படங்களும் இணையத்தில் வைரலாகின.

    பெயின்டை உடலில் ஊற்றிக்கொண்டு படுத்தும், உருண்டும் உதயநிதி ஸ்டாலின் படத்தை பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஒருவர் வரைந்துள்ளார். இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

    பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், திருக்கோவிலுார் அருகே அரசு பள்ளியில் பணியாற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, உடலில் பெயின்டை ஊற்றிக்கொண்டு, படுத்தும், உருண்டும் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார். நூதன முறையிலான இந்த ஓவியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது

    கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம். இவர், நுாதன முறையில் தொடர்ச்சியாக பல வகையான ஓவியங்களை வரைந்து வருகிறார்.

    சமீபத்தில், வாயில் பிரஷை கொண்டு கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் படங்களை வரைந்தார்.

    இந்நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தனது உடல் மீது பெயிண்டை ஊற்றிக்கொண்டு, துாரிகை பயன்படுத்தாமல், கீழே இருக்கும் பதாகையில் படுத்தும், உருண்டும், நெளிந்தும் ஒரு மணி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி