ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டல்... பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டல்... பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
விக்னேஷ்
  • Share this:
சமூக வலைதளங்களில் பல பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி மிரட்டிய பட்டதாரி இளைஞரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதாச்சலத்தை அடுத்த கொம்மனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் சமூக வலைதளங்களில் பல பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதாக கூறி மிரட்டி அவர்களை பாலியல் தொந்தரவு செய்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு புகார் வந்தது.

Also Read : காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உறவில் இருந்த மனைவி: இருவரையும் சரமாரியாக வெட்டிய கணவர் 


விக்னேஷால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விருத்தாசலத்தில் இருந்த விக்னேஷை மத்திய குற்றப்பிரிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்