• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜக நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக எம்.பியை கைது செய்க - பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

பாஜக நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக எம்.பியை கைது செய்க - பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

Pon radhakrishnan

Pon radhakrishnan

பாராளுமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்தாக வேண்டும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்

  • Share this:
    நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றிய பாஜக நிர்வாகியை தாக்கிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 12வது ஒன்றிய கவுன்சில் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக  பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக நிர்வாகி பாஸ்கரை முன்னாள் அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் குறித்து விசாரித்ததோடு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

    பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வள்ளியூர் ஒன்றியம் 12வது வார்டு வேட்பாளருக்கு பணிபுரிந்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பாஸ்கர் என்பவரை நேற்று இரவு இந்தப் பாராளுமன்றத் தொகுதி உடைய உறுப்பினர் ஞானதிரவியம் அவர்களும், அவருடைய கட்சியைச் சேர்ந்த நபர்களும் சேர்ந்து பாஸ்கர் அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அவருடைய உடல் முழுவதும் வேதனையில் இருந்து கொண்டிருக்கிறது என சொல்கிறார்கள். மர்மப் பகுதியில் மிதித்த காரணத்தால் மிகக்கடுமையாக தான் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.

    Also Read: ரூ.100 செலுத்தினால் 1000 ஆபாச வீடியோக்கள்.. டெலிகிராம் மூலம் அரங்கேறிய பிஸினஸ்!

    மருத்துவமனையில் இருந்து அவரை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நோயாக தாக்குதலாக இருந்தாலும் கூட அதனுடைய பாதிப்பை கண்டறிய 48 மணி நேரம் ஆகும் 72 மணி நேரம் ஆகும் என சொல்லக்கூடிய நிலையில் இன்று உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என சொல்கிறார்கள். சாதாரணமாக அரசு மருத்துவமனையில் ஸ்கேன் , எக்ஸ்ரே  உள்ளிட்ட முடிவுகள் வர இரண்டு நாள் ஆகும்.

    ஆனால் இவருடைய முடிவுகள் தயாராக உள்ளது. இவ்வளவு வேகமாக அரசு மருத்துவமனை செயல்படுவதை பார்த்தால் ரொம்ப சந்தோசமாக உள்ளதாகவும் ஆனால் பாஸ்கருக்கு மட்டுமே இதுபோன்ற துரிதமாக நடைபெறுகிறது. பக்கத்தில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு இரண்டு நாள் ஆன பின்னும் கூட ரிப்போர்ட் கிடைக்கவில்லை ஆகையினால் இந்தத் தாக்குதலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுகின்ற முயற்சியில் மருத்துவத் துறையினர் சேர்ந்து பணிபுரிகிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது.

    Also Read:   Mask Gun: அசத்தும் இந்திய ஆன்லைன் ஷூட்டர் கேம்.. புதிய சாதனை!

    தமிழக முதல்வர் அவர்களுக்கு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி அவர்களுக்கு என்னுடைய கோரிக்கை, தாக்குதல் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்தாக வேண்டும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அவரை அழைத்து சென்றது கட்சித் தொண்டர்களா அடியாட்களா  என்று தெரியாது ஆனால் அவர்கள் மீதும் முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.  மேலும் பாஸ்கரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தால் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

    ஐயப்பன் - செய்தியாளர், நெல்லை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: