Home /News /tamil-nadu /

ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்திய 4 பேர் கைது!

ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்திய 4 பேர் கைது!

பிடிபட்ட செம்மர கட்டைகள்

பிடிபட்ட செம்மர கட்டைகள்

தருமபுரி அருகே லாரியில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 4 பேரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.

பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 2 லாரிகளும் சேதமடைந்தன. விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்த 20 பேரும் தப்பி ஓடினர். இதில் 4 பேரை மட்டும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கைது செய்தனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான 34 செம்மரக்கட்டைகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

பிடிபட்டவர்கள் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணிக்கம், மகாலிங்கம், மூக்குத்தியான் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஈஸ்வரன் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தப்பியோடிய 16 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dharmapuri

அடுத்த செய்தி