'எங்கள் மீது நம்பிக்கை வைத்த முதல்வர்தான் எங்கள் கடவுள்...' 24 அரியர் வைத்திருந்த மாணவன் நெகிழ்ச்சி

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எங்கள் மீது நம்பிக்கை வைத்த முதல்வர்-க்கு நன்றி என்று 24 அரியர் வைத்திருந்த மாணவர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.

'எங்கள் மீது நம்பிக்கை வைத்த முதல்வர்தான் எங்கள் கடவுள்...' 24 அரியர் வைத்திருந்த மாணவன் நெகிழ்ச்சி
  • Share this:
கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாணவர்கள் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். சிலர் அவருக்கு வாழ்த்து பதாகைகள் வைத்தும் நன்றி தெரிவித்தனர். இதனிடையே முதல்வர் தான் எங்கள் கடவுள் என்று 24 அரியர் வைத்திருந்த திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் அருகே கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் நேரு (23). தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் 3ம் ஆண்டு படித்து, நான்காம் ஆண்டு செல்கிறார். இவர் மொத்தம் 24 பாடங்களில் தேர்ச்சி பெறாமல், அரியர் வைத்திருந்தார்.


அழுத்தம் அதிகரித்ததால் பொறியியல் படிப்பையே பாதியில் விட்டு விடலாம் என்கிற முடிவில் இருந்துள்ளார். இந்நிலையில், கல்லூரி அரியர்ஸ் ஆல் பாஸ் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பால் திக்குமுக்காடி போயுள்ளார் சஞ்சய் நேரு.  முதலமைச்சரை கடவுள் என்று புகழ்ந்துள்ள சஞ்சய், எங்கள் மீது நம்பிக்கை வைத்த முதலமைச்சருக்கு அனைத்து மாணவர்களின் சார்பில் நன்றி சொல்கிறோம் என்றுள்ளார்.மேலும், அரியர் சுமையைக் நீக்கி, எங்கள் வாழ்க்கையை தீர்மானித்துள்ள  முதலமைச்சருக்கு நன்றி சொல்லும் வகையில்,  வரும் தேர்வுகளில் கவனமாக படித்து, அதிக மதிப்பெண் பெறுவோம். இனி அரியர் வைக்காமல் தேர்ச்சி பெறுவோம் என்கிறார் நம்பிக்கையுடன்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading