• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரம்: தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தின் முரண்பட்ட கருத்துகளால் நீடிக்கும் குழப்பம்

அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரம்: தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தின் முரண்பட்ட கருத்துகளால் நீடிக்கும் குழப்பம்

அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம்.

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முரண்பட்ட கருத்துகளால் குழப்பம் நீடித்து வருகிறது.

  • Share this:
    கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட ஊரடங்கால், தமிழகத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இதனால், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருந்தவர்கள் உட்பட தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

    தமிழக அரசின் இந்த முடிவை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், அதுபோல் எந்தக் கடிதமும் அரசுக்கு வரவில்லை எனக் கூறியிருந்தார்.

    இதுகுறித்து மீண்டும் விளக்கமளித்த சூரப்பா, ஏ.ஐ.சி.டி.இ.யிடம் இருந்து கடந்த 30ம் தேதியே கடிதம் வந்ததாகவும், அன்றைய தினமே உயர்கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் மறுப்புக்குப் பின்னர் மீண்டும் 2வது முறை கடிதம் அனுப்பப்பட்டதாகவும் சூரப்பா தெளிவுப்படுத்தியுள்ளார்.

    Also read: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களை அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு



    இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோரின் மாறுபட்ட கருத்துகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக அரசும் இணைந்து ஒருமித்த முடிவை எடுத்து, அதை அறிவிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: