முதல்வரை கொண்டாடும் அரியர் மாணவர்கள்

அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்தியிருந்தாலே அனைவரும் தேர்ச்சி என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை பாராட்டி, புகழ்ந்து வருகின்றனர் கல்லூரி மாணவர்கள்..

  • News18
  • Last Updated: August 28, 2020, 5:32 PM IST
  • Share this:
கொரோனா தொற்றால் உலகமே அஞ்சிக் கிடக்க, தமிழக கல்லூரி மாணவர்கள் மட்டும் உச்சகட்ட உற்சாகத்தில் கும்மாளம் அடிக்கின்றனர். இறுதி செமஸ்டரை தவிர, எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும், அதற்கான கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி என்ற முதலமைச்சரின் அறிவிப்புதான் இதற்கு காரணம்.

அரியர்களை எப்படி கிளியர் செய்யப் போகிறோமோ என்ற கவலையில் இருந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வரபிரசாதமாகவே மாறிவிட்டது. குறிப்பாக 10, 15 அரியர் வைத்த மாணவர்கள், முதலமைச்சரின் தீவிர ரசிகர்களாகவே மாறிவிட்டனர். மாஸ் என்ட்ரி, போற்றி புகழ்பாடும் வசனங்கள் என மீம்ஸ் வீடியோக்களை உருவாக்கி, தெறிக்க விட்டுள்ளனர்.

இன்னும் சிலரோ அரியர் வைத்ததால் அவமதித்த ஆசிரியர்கள் முன்பு கெத்து காட்டுவது போன்ற வீடியோக்களையும் வைரலாக்கி வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமிக்கு காவிரி நாயகன், டெல்டா நாயகன் என பேனர் வைத்து பார்த்திருப்போம். ஈரோடு பகுதி மாணவர்களோ, "அரியர் மாணவர்களின் அரசனே" என பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.


திருக்குறளை மேற்கோள்காட்டி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள இந்த பேனரை, பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மறுபுறம், நாம் படிக்கும் காலத்தில் இதுபோன்ற அறிவிப்பு வரவில்லையே என கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எது எப்படியோ இந்த ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு என்பதை போல, கொரோனா புண்ணியத்தால் தேர்ச்சி அடைந்த உற்சாகத்தில் அரியர் மாணவர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading