முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் - உமேஷ் சின்ஹா (வீடியோ)

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் - உமேஷ் சின்ஹா (வீடியோ)

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் - உமேஷ் சின்ஹா (வீடியோ)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதுடன், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர், 2 நாள் பயணமாக சென்னை வந்தனர். திங்கட்கிழமை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையக் குழுவிடம், சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, 2வது நாளாக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமேஷ் சின்ஹா, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விருப்பப்பட்டால் தபால் வாக்கு வசதியை பயன்படுத்தலாம் என்றும், அவர்களது வீட்டுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது தொடர்பாக, மாநில அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக, ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வீடுகள்தோறும் இணையவசதி உடன் கணினி வழங்கப்படும்:

மேலும், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? என்று தற்போது கூறமுடியாது என்றும் விளக்கமளித்தார். வாக்குச்சாவடிகளில் சாய்வு நடைமேடை, காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக உமேஷ் சின்கா தெரிவித்தார்.

' isDesktop="true" id="383863" youtubeid="VYHGlrwI4xg" category="tamil-nadu">

கொரோனா காலம் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 சதவீதம் வரை கூடுதலாக செலவு செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய சின்ஹா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் செலவுத் தொகையை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Election Commission, India post, TN Assembly Election 2021, Voters list