Home /News /tamil-nadu /

31 ஆண்டு கால போராட்டம்: நெகிழவைக்கும் தாய்ப் பாசம்- அற்புதம்மாளின் வாழ்க்கைப் பயணம்

31 ஆண்டு கால போராட்டம்: நெகிழவைக்கும் தாய்ப் பாசம்- அற்புதம்மாளின் வாழ்க்கைப் பயணம்

பேரறிவாளன்

பேரறிவாளன்

தனது மகனை மீட்க 1991-ம் ஆண்டு தொடங்கிய அற்புதம்மாளின் போராட்டம் இன்றுதான் முடிவுக்கு வந்துள்ளது.

  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மகன் பேரறிவாளனை, தனது 31 ஆண்டுகால நீதிப் போராட்டத்தால் அற்புதம்மாள் மீட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையைத் தெரிந்துகொள்வோம்.

  31 ஆண்டுகளுக்கு பிறகான பேரறிவாளன் விடுதலைக்கும், 161 சட்டப்பிரிவு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக்கும் முக்கிய காரணகர்த்தா பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் என கூறினால் மிகையாகாது. 1991- ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

  இச்சம்பவம் தொடர்பாக அதே ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய குண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சென்னை கல்லூரி ஒன்றில் படித்து வந்த 19 வயது மாணவனான பேரறிவாளனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தொடங்கியது தான் அற்புதம்மாளின் சட்ட போராட்டம். அப்போது அற்புதம்மாளுக்கு 43 வயது.

  அச்சமயம் முதல், களைத்துபோன முகமும்,தோள்பட்டையில் பைய், நரைத்த முடி, ரப்பர் செருப்பு என வலம் வந்த அற்புதம்மாளின் விடா முயற்சிக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு பிறந்திருக்கிறது.

  பேரறிவாளன் சிறையில் இருக்க கணவர் குயில்தாசன் அன்பு, அருள் என்ற இரு பெண்களுடன் ஜோலாபேட்டையில் வசித்து வந்தார் அற்புதம்மாள். பேரறிவாளன் மரண தண்டனையை எதிர்நோக்கி 13 ஆண்டுகளை சிறையில் கழித்தார். அப்போது அவரை பார்க்க வேண்டும் என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வந்து, சிபிஐ அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி, மீண்டும் பூந்தமல்லி சென்று காத்திருந்து பார்க்க வேண்டும். இதற்காக அவர் நூற்றுக்கணக்கான 200 கிலோ மீட்டர் பயணங்களை மேற்கொண்டுள்ளார். பல நாட்கள் தனது மகனை சந்திக்காமலே திரும்பியிருக்கிறார்.

  2011- ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறித்ததை தொடர்ந்து, செங்கொடி என்ற 21 வயதான பெண், தீக்குளித்து மாண்டு போனார். மேலும் கலங்கி போனார் அற்புதம்மாள். மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்பு தீவிரமடைந்து சட்டப் போராட்டம் மூலம் அவர்கள் தூக்கில் போடப்படுவது தடுக்கப்பட்டது. அற்புதம்மாளின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்பது முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன் மிகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஒரு தவறு தான்.

  தியாகராஜனின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இது பேரறிவாளன் வழக்கில் மிகப்பெரிய அணுகுமுறை மாற்றத்தை அளித்தது.

  பேரறிவாளனிடமும், அற்புதம்அம்மாளிடம் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

  பின்னர் மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என அற்புதம்மாள் போகாத இடம் இல்லை. அதிமுகவோ, திமுகவோ மாநிலத்தில் ஆளும் கட்சி எதுவாகினும் பேரறிவாளனின் விடுதலையை நோக்கியே அரசின் சட்ட நகர்வுகள் இருந்தன. இதற்கு முழு காரணம் அற்புதம்மாளின் அணுகுமுறை என கூறலாம். தூக்கு தண்டனை குறைப்பு, 30 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற ஜாமின், தற்போது விடுதலை என தனது மகனின் ஒவ்வொரு வெற்றிக்கும் பெரும் பின்புலமாக இருந்தது அற்புதம்மாளின் ஓயாத உழைப்பு தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 வருடங்களுக்கு முன் என்னிடமிருந்து பறிக்கப்பட்டான். அப்போது அவருக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவர் பின்னால் ஓட ஆரம்பித்தேன், இன்னும் ஓடுகிறேன் என ட்விட்டரில் பயோ வைத்துள்ள அற்புதம்மாள் இனி அதனை மாற்றிக்கொள்வார் என தெரிகிறது.

   
  Published by:Karthick S
  First published:

  Tags: Arputham Ammal

  அடுத்த செய்தி