பா.ஜ.கவிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை! செல்லூர் ராஜூவுக்கு அற்புதம்மாள் பதில்

ஒவ்வொரு ஊராக சென்று அனைவருடன் கலந்து பேசி கடைசியில் ஆளுநர் கையொப்பம் இடவில்லை என்றால் அப்பொழுது அனைவரும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.

பா.ஜ.கவிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை! செல்லூர் ராஜூவுக்கு அற்புதம்மாள் பதில்
அற்புதம்மாள்
  • News18
  • Last Updated: February 11, 2019, 7:58 AM IST
  • Share this:
எழுவர் விடுதலைக்காக தமிழக அரசுதான் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது என அற்புதம்மாள் தெரிவித்தார்.

எழுவர் விடுதலைக்கான மக்கள் சந்திப்பு இயக்கத்தின் சார்பில் பேரறிவாளனின் தாயார் ஒவ்வொரு மாவட்டமாக ஊர்வலமாக சென்றுவருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இது கலந்துரையாடல் கூட்டம் தான். பொதுக்குழு அல்லது மாநாடு கிடையாது. இது பெரும்பான்மை காட்டும் நேரம் கிடையாது.

ஒவ்வொரு ஊராக சென்று அனைவருடன் கலந்து பேசி கடைசியில் ஆளுநர் கையொப்பம் இடவில்லை என்றால் அப்பொழுது அனைவரும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. நான் தமிழக அரசு கட்டுப்பாட்டில் வாழக்கூடிய ஒரு குடிமகள். என் மகனும் அப்படித்தான். எழுவர் விடுதலையை தமிழக அரசுதான் பெற்றுத்தரவேண்டும்.


நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. நீதிமன்றத் தீர்ப்பையே ஏன் ஆளுநர் மதிக்கவில்லை என்று தான் இந்த மக்கள் சந்திப்பு கலந்துரையாடல். இதில் அ.தி.மு.க மெத்தனமாக இருக்கிறதா? சுறுசுறுப்பாக இருக்கிறதா? என்பது எனக்கு தேவையில்லாத பிரச்சனை

இந்த வழக்கு தொடர்ந்ததில் எனக்கு வெறும் வாய்தா மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் கூட வழக்கு நிலுவையில் உள்ளது என்று இழுத்தடித்தார்கள் . எழுவர் விடுதலையில் அனைவரும் அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உங்கள் மகனை உங்களிடம் ஒப்படைப்பேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்து உள்ளார்கள்.

இது அனைவருக்கும் தெரியும். அதை புரிந்தவர்கள், இப்பொழுது அரசியலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றி தான் ஆகவேண்டும். எழுவர் விடுதலை எங்களுடைய கொள்கை முடிவு என்று அனைவரும் சொல்கிறார்கள். அந்த கொள்கை முடிவை நிறைவேற்றுவார்களா ? அல்லது பாதியில் விட்டு செல்கிறார்களா ? என்பதை செய்தியாளர்கள் நீங்கதான் கேட்க வேண்டும். செல்லூர் ராஜு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த எழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியதற்கு முதலில் நானே சற்று ஆத்திரப்பட்டேன்.ஆனால் மக்களாகிய நாம் போட்ட வாக்கு பிச்சையை கொண்டு தான் அமைச்சரவையில் உள்ளார். அவர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஏழு பேர் விடுதலைக்கு தீர்மானம் போட்டு கையெழுத்திட்டு ஆளுநரிடம் கொடுத்தார்கள்’என அற்புதம்மாள் தெரிவித்தார்.

Also see:

First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்