Arputhammal : 'அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு'.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் விடுப்பு வழங்க பேரறிவாளன் தாயார் வேண்டுகோள்

அற்புதம்மாள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர வேண்டியுள்ளது.

     

     



     

     

    இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்க கோரி 10ம் தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7ஆம்தேதி உத்தரவிட்டுள்ளது.

    எனவே மாண்புமிகு முதல்வர் முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3வது நாளாக 33,000 த்தை கடந்துள்ளது. அதேநேரம் சென்னையில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,075 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், 12 வயதுக்குட்பட்ட 1,327 சிறுவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்தை கடந்துள்ளது.வைரஸ் பாதிப்பால் மேலும் 335 பேர் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 18,005 ஆக அதிகரித்துள்ளது.

    Muat Read :  புதிய வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் வீரியமுடன் செயல்படுகிறது - பாரத் பயோடெக் பெருமிதம்!

     

    பெருந்தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 20,486 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 13 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், 2 லட்சத்து 31,596 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published: