என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் - அற்புதம்மாள்

என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் - அற்புதம்மாள்
அற்புதம்மாள்
  • News18
  • Last Updated: September 9, 2019, 9:27 AM IST
  • Share this:
என்னுடைய உயிர் இருக்கும் போதே என் மனகனி விடுதலை செய்துவிடுங்கள் என்று பேரறிவாளவின் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவருகின்றனர். 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் தனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாள் பல்வேறு விதமாக போராடி வருகிறார்.

இந்நிலையில் தன் மகனை விடுதலை செய்ய கோரி அற்புத்தம்மாள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #29YearsTooMuchGovernor என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு. நிரபராதி, விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே! 29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!’ என்று தெரித்துள்ளார்

Also watch

First published: September 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்