ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துளளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வெளிப்படுத்திவிட்டது என தெரிவித்தார்.
மாண்புமிகு @mkstalin அவர்களுக்கு அன்புகலந்த நன்றி🙏🏻 pic.twitter.com/sj08T79tVN
— Arputham Ammal (@ArputhamAmmal) December 24, 2021
இவ்வதிகாரத்தை பயன்படுத்தி முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை தீர்த்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர் என அற்புதம்மாள் குற்றம்சாட்டினார்.
Also read... தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி வேகமான ஆட்சி மட்டும் இல்ல, விவேகமான ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி பரிந்துரைக்க குழுவை அமைத்தது முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arputham Ammal