• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?" - அற்புதம் அம்மாள் கேள்வி!

"ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?" - அற்புதம் அம்மாள் கேள்வி!

பேரறிவாளன் உடன் அவரது தந்தை மற்றும் தாய் அற்புதம் அம்மாள்

பேரறிவாளன் உடன் அவரது தந்தை மற்றும் தாய் அற்புதம் அம்மாள்

நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆளுநர் மாளிகைக்கு புரிவதெப்போ ?? என்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அமைச்சரவை பரிந்துரைத்தும் 100 நாட்கள் ஆகின்ற நிலையில் ஆளுநர் மௌனம் காப்பது ஏன் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகளின் விளக்கத்தின் அடிப்படையில் தன்னை விடுவிக்க வேண்டுமென்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, 7 பேரை விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சரவை குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானமாக நிறைவேற்றியது.

இது குறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் தீர்மானம் நிறைவேற்றி 100 நாட்கள் ஆகியும் இது குறித்து தமிழக ஆளுநர் எந்த பதிலும் இதுவரை ஏன் அளிக்கவில்லை.





நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆளுநர் மாளிகைக்கு புரிவது எப்போ ?? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: