விருகம்பாக்கத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடந்து சென்ற 3 பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பாலியல் தொல்லை செய்துள்ளனர்.
விருகம்பாக்கம் இளங்கோ நகர் முதல் தெருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் நடந்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்து தப்பியோடியுள்ளார்.
அதே போல் விருகம்பாக்கம் இளங்கோ நகர் இரண்டாவது தெருவில் தனது தாயாருடன் நடந்து வந்த டெண்டல் மருத்துவமனை அசிஸ்டெண்ட் பெண்ணை இரு சக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்து தப்பியோடியுள்ளார்.
அதனை தொடர்ந்து விருகம்பாக்கம் நடேசன் தெருவில் நடந்து சென்ற பெண் உதவி பேராசியரை இரு சக்கரவாகனத்தில் வந்த நபர் முதுகில் தட்டி பாலியல் தொல்லை கொடுத்து தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட 3 பெண்களும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்க சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.