Home /News /tamil-nadu /

21 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் மூழ்கிய டெல்டா மாவட்டங்கள்

21 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் மூழ்கிய டெல்டா மாவட்டங்கள்

கஜா புயலினால் சாய்ந்த மின் கம்பம் (கோப்புப் படம்)

கஜா புயலினால் சாய்ந்த மின் கம்பம் (கோப்புப் படம்)

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 21 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், அந்த மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 5 ஆயிரம் மின்கம்பங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஆயிரம் என மொத்தம் சுமார் 21 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 2 மின்னழுத்த கோபுரங்கள், 50 டிரான்ஸ்பார்மர்கள், 50 துணை மின் நிலையங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளன.

இதனிடையே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும், உயர் அழுத்த மின்பாதை சீரமைக்கப்பட்ட பின்னர்தான் மின் இணைப்புகள் வழங்க முடியும் எனவும் 2, 3 நாட்களில் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

முதற்கட்டமாக மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பேரிடர் மீட்பு அலுவலகங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Also watch

Published by:DS Gopinath
First published:

Tags: Cyclone Gaja

அடுத்த செய்தி