வடமாநிலங்களில் கனமழை - திருப்பூரில் ₹100 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம்!

மழை பாதிப்பால் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகளை வாங்க வடமாநில வர்த்தகர்கள் தயங்கி வருகின்றனர்.

news18
Updated: August 6, 2019, 1:29 PM IST
வடமாநிலங்களில் கனமழை - திருப்பூரில் ₹100 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம்!
தேக்கமடைந்துள்ள பின்னலாடைகள்
news18
Updated: August 6, 2019, 1:29 PM IST
வடமாநிலங்களில் பெய்து வரும் மழையால் திருப்பூரில் சுமார் 100 கோடி ரூபாய்  மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் பெரும்பாலும் ஆந்திரா, மும்பை, குஜராத், டெல்லி போன்ற வடமாநிலங்களையே அதிக அளவில் சார்ந்துள்ளது.

திருப்பூரில் தயாராகும் பெரும்பாலான பின்னலாடைகள் இந்த மாநிலங்களுக்கு தினமும் லாரிகள் மூலமாகவும், ரயில் மூலமாகவும் அனுப்பபட்டு வருகின்றன.


இந்நிலையில் வட மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால், பின்னலாடை ஏற்றுமதி தேக்கமடைந்துள்ளது.

Also read... மும்பை, புனே, நாசிக்கில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!

மழை பாதிப்பால் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகளை வாங்க வடமாநில வர்த்தகர்கள் தயங்கி வருகின்றனர்.

Loading...

மேலும், வடமாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பின்னலாடைகளை ஒரு மாதத்திற்கு மேலாக அனுப்ப முடியாமல் தவித்து வருவதாகவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...