Home /News /tamil-nadu /

பிபின் ராவத் டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல், விபத்தை சந்தித்தது வரை நடந்தது இதுதான்...

பிபின் ராவத் டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல், விபத்தை சந்தித்தது வரை நடந்தது இதுதான்...

Bipin Rawat

Bipin Rawat

பிபின் ராவத் புறப்பட்ட சூளூரிலிருந்து விபத்து நேர்ந்த இடம் 96 கிலோ மீட்டர் தொலைவிலும், சேர வேண்டிய வெலிங்டன் ராணுவப் பள்ளி 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

  • Last Updated :
    இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தை சந்தித்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிபின் ராவத் என்ன ஆனார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

    விபத்தில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளன. இதனால் பிரேத பரிசோதனைக்கு பின்னரே யார் யார் உயிரிழந்தார்கள் என்ற விபரம் தெரியவரும்.

    ஊட்டி வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிபின் ராவத் இன்று காலை 9 மணிக்கு தனது மனைவியுடன் புறப்படுகிறார்.

    Also Read : ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன?

    சூளூர் விமானப்படை தளத்தை நோக்கி வந்த சிறப்பு விமானத்தில், மொத்தம் 9 பேர் இருந்துள்ளனர். காலை 9 மணிக்கு புறப்பட்ட சிறப்பு விமானம் சூளூருக்கு முற்பகல் 11.35-க்கு வந்துள்ளது.

    அங்கிருந்து, Mi 17 ஹெலிகாப்டர் மூலம் முற்பகல் 11.45-க்கு பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்பட 14 பேர் ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சிப் பள்ளியை நோக்கி செல்கின்றனர். இந்த 14 பேரில், 5 பேர் ஹெலிகாப்டர் குழுவை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், மதியம் 12.20-க்கு நஞ்சப்ப சத்திரம் அருகே கட்டேரி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    பிபின் ராவத் புறப்பட்ட சூளூரிலிருந்து விபத்து நேர்ந்த இடம் 96 கிலோ மீட்டர் தொலைவிலும், சேர வேண்டிய வெலிங்டன் ராணுவப் பள்ளி 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

    Also Read :  ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 13 பேர் பலி; ஒருவருக்கு சிகிச்சை - வெளியான பகீர் தகவல்கள்

    கூடுதலாக இன்னும் 5 நிமிடங்கள் ஹெலிகாப்டர் சென்றிருந்தால் வெலிங்டன் ராணுவப் பள்ளியை அடைந்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில், ராணுவ அதிகாரிகள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் விபரம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Indian army

    அடுத்த செய்தி