Home /News /tamil-nadu /

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன?

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன?

விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விரைந்துள்ளார். முப்படை தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருப்பது, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தனது குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

    சூலூர் விமானப்படை தளத்திலிருந்து முற்பகல் 11.47 மணியளவில், Mi 17 V5 என்ற ஹெலிகாப்டர் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் இருந்தனர்.

    இந்நிலையில், காட்டேரி மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது, 12.20 மணியளவில் விபத்துக்குள்ளானது. வெலிங்டன் ராணுவ பள்ளியில் தரையிரங்குவதற்கு, 5-10 நிமிடங்கள் இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிக் கொண்டது.

    அடர்ந்த வனப்பகுதியில் விழுந்த ஹெலிகாப்டர் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

    Also Read : குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

    இருப்பினும், பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரம் தெரிவிக்கப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல் முற்றிலும் சிதைந்துள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மரத்தின் மீது மோதியதால்தான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பனி மூட்டம் அதிகமாக இருந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் பனி மற்றும் குறைந்த வெளிச்சத்தால் எந்த பாதிப்பையும் சந்திக்காது என்று பாதுகாப்பு துறை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

    Also Read : Helicopter Crash: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் - உறுதிப்படுத்திய விமானப்படை

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை நாடாளுமன்றத்தில் விபத்து குறித்து அவர் அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நிலைமையை ஆய்வு செய்து, விபத்து தொடர்பாக ராஜ்நாத் சிங் நாளை நாடாளுமன்றத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விரைந்துள்ளார். முப்படை தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருப்பது, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Helicopter, ICDS

    அடுத்த செய்தி