Home /News /tamil-nadu /

BREAKING | குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து - 4 வீரர்கள் பலி என முதற்கட்ட தகவல்

BREAKING | குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து - 4 வீரர்கள் பலி என முதற்கட்ட தகவல்

Army chopper crash

Army chopper crash

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல்

    குன்னூர் அருகே ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.



    விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஹெலிகாப்டர் விழுந்ததில் அதில் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர். இதனிடையே விபத்துக்குள்ளான  ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும், அவரின் குடும்பத்தினரும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் படைகளின் ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்.

     
    Published by:Arun
    First published:

    Tags: Army

    அடுத்த செய்தி