• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அழிவை நோக்கி செல்கிறனவா அம்மா உணவகங்கள்? - கமல் கேள்வி

அழிவை நோக்கி செல்கிறனவா அம்மா உணவகங்கள்? - கமல் கேள்வி

Kamal

Kamal

அம்மா உணவகத்திட்டம் பெயர் மாற்றப்படாமலே சிறப்பாகத் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் வரும் செய்திகள் அந்த உறுதிமொழிக்கு எதிராக உள்ளன.

  • Share this:
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மலிவு விலை உணவகமான ‘அம்மா உணவகங்கள்’ அழிவை நோக்கி செல்கின்றனவா என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சமீப காலமாக அம்மா உணவகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணிநீக்கம், பணியிட மாற்றம், இரவு நேர உணவாக இருந்த சப்பாத்தி நீக்கப்பட்டது, ஊழியர் போராட்டம் என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனை கண்டித்து நீலாங்கரையில் அம்மா உணவக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி செல்கின்றனவா என கேள்வி எழுப்பி கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கமல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

    ஏழை எளிய மக்களின் பசியாற்று மையங்களாகத் திகழ்கின்றன அம்மா உணவகங்கள். இங்கே மலிவு விலையில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பன்மடங்கு பெருகியுள்ளது.

    தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்றுவருகின்றன. திமுக அரசும் அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை என அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை குறைத்து வருவதாகவும் வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

    Also read: லக்கிம்பூர்கேரியில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்தை சந்தித்ததற்காக விவசாயிகளின் போராட்ட குழு தலைவர் சஸ்பெண்ட்!

    அம்மா உணவகங்களில் இரவு உணவுக்கு, சப்பாத்தி தயாரிக்கப்பட்டு வந்தது. இது அரசு மருத்துவமனை நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியோருக்கு பயனுள்ளதாக இருந்தது. மேலும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென பணிநீக்கமும், பணியிட மாற்றமும் நிகழ்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு வாயிலாக இதை நிறைவேற்றியிருப்பதாக சொல்கின்றன ஊடகங்கள்.

    இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அம்மா உணவகம் நட்டத்தில் இயங்குவதே காரணம் என்கிறார்கள். சென்னை மாநகராட்சி தன் வருவாயை பெருக்கிக் கொள்ள பல வழிகள் இருக்கையில், சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல, இத்திட்டத்தின் கீழ் பலனடையும் பணியாளர்கள், பயனாளிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Also read:    ரூ.100ஐ தொட்டது டீசல் விலை.. பெட்ரோல் விலை இன்றும் (அக்டோபர் 23) ஏறுமுகம்!

    உணவு மனிதர்களின் அடிப்படை உயிர் ஆதார விசைகளில் ஒன்றாக இருக்கும் போது அதை குறைந்த விலையில் தரும் திட்டத்துக்கு செலவு செய்ய அரசு அமைப்புகள் தயங்கவே கூடாது, அம்மா உணவகத்திட்டம் பெயர் மாற்றப்படாமலே சிறப்பாகத் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் வரும் செய்திகள் அந்த உறுதிமொழிக்கு எதிராக உள்ளன. ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்த திட்டத்தை முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பாக செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்க முடியும்.

    அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கமல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: