ஆயுதப்படைக் காவலர் வெட்டிக்கொலை: கிரிக்கெட் மோதல் காரணமா? கொலையாளிகள் யார்?

செங்கல்பட்டு அருகே ஆயுதப்படைக் காவலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த கொலையாளிகள் யார்?

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 12:53 PM IST
  • Share this:
செங்கல்பட்டு மாவட்டம் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்தவர் இன்ப அரசு. இவர் சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை போலீசாக ஆக பணிபுரிந்து வந்தார். புழல் பகுதியிலிருந்து தமது பகுதியில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி முடித்து திங்கட்கிழமை காலை பணிக்குச் செல்ல தயாராகிக்கொண்டு இருந்துள்ளார். வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. நண்பர் அழைப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். வீடு அருகில் அடர்ந்த முட்புதர் நிறைந்த சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் காவலர் இன்ப அரசு வலது கை துண்டானது. மேலும், முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அப்பகுதி வழியாக 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பார்த்து உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்தனர். பட்டப்பகலில் காவலரைக் கொடூரமாக கொலை செய்தவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: மாநகராட்சி அறிவிப்புகிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடைசியாக இன்ப அரசுக்கு யார் போன் செய்தது என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading