ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’நல்லதொரு மாற்றத்தைத் தருவேன் என நம்புகிறேன்.. ரஜினிக்கு டூப்பாக இருக்கமாட்டேன்’ - கட்சி தொடங்குகிறாரா அர்ஜுனமூர்த்தி?

’நல்லதொரு மாற்றத்தைத் தருவேன் என நம்புகிறேன்.. ரஜினிக்கு டூப்பாக இருக்கமாட்டேன்’ - கட்சி தொடங்குகிறாரா அர்ஜுனமூர்த்தி?

ரஜினிகாந்த் - அர்ஜூன மூர்த்தி

ரஜினிகாந்த் - அர்ஜூன மூர்த்தி

பாஜகவுடன் கருத்து வேறுபாடு எனக்கு இல்லை. நான் பணியாற்றிய வரை சந்தோசமாக தான் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார் அர்ஜுனமூர்த்தி

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

”நிறைய மாற்று சிந்தனைகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் அதை வழி நடத்தி செல்ல வேண்டியது யார் என்ற கேள்வி உள்ளது. ஏற்கனவே ஆளுமைகள் பல உள்ள நிலையில் நான் என்ன சாதிக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். என் குடும்பத்தினரும் கேட்டனர். இதற்கு தொலை நோக்கு பார்வை வேண்டும். 50 ஆண்டுகள் ஒரு முறை ஒரு சுழற்சி வரும்” என கூறியுள்ளார் அர்ஜுன மூர்த்தி. 

ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சூழலில், கொரோனா அச்சுறுத்தல், உடல்நலம் உள்ளிட்ட விஷயங்களால் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த். இந்த அறிவிப்புக்கு பிறகு, தமிழருவி மணியன், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ரஜினியுடன் தான் தொடர்ந்து பயணிக்கப்போவதாகக் கூறிய அர்ஜுனமூர்த்தி, விரைவில் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `மாற்றத்தின் வழியில் புதிய பயணம்’ என்று ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் அர்ஜுனமூர்த்தி.

இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அர்ஜுன மூர்த்தி அறிவித்துள்ளார். தனது அண்ணாநகர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இதனை அறிவித்துள்ளார்.

அர்ஜுன மூர்த்தி பாஜகவிலிருந்து விலகி ரஜினி ஆரம்பிப்பதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். ரஜினி கட்சி தொடங்காததால் தற்போது தானே தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். கட்சி பெயர் பதிவு செய்வது சின்னம் ஒதுக்க கேட்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு வாரத்தில் கட்சி தொடக்கம் அறிவித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கூறியுள்ளார்.

”பாஜகவிலிருந்து விலகிய போது கட்சியில் தனது எந்த கருத்து வேறுபாடு இல்லை, தான் பணியாற்றிய வரை சந்தோசமாக தான் இருந்தேன் என்றார். பாஜகவும் திமுக அதிமுகவுக்கு மாற்று என்று தான் கூறுகிறது, ஏன் பாஜகவிலேயே மீண்டும் சேரவில்லை என கேட்டதற்கு தான் மாற்று சிந்தாந்த்த்துடன் இருப்பதாக கூறியுள்ளார், அது பாஜகவிலிருந்து மாறுபட்டதா என்றதற்கு நேரடியாக பதில் கூறவில்லை. கட்சியின் அடிப்படை கொள்கை என்னவென்று கேட்டதற்கு ' inclusiveness' என்றார். ஓபனாக இருக்க வேண்டும், cached memory கூடாது என்றார். நோக்கியா போன் இருக்கும் போது ஸ்மார்ட்ஃபோன் வந்து ஆக்கிரமிக்கும் என யாராவது நினைத்தோமா? என்றார். மேலும் மதசார்பு கட்சியில் இருக்காது என்றார். ரஜினியின் கொள்கைகளை ஏற்று பணியாற்ற சில நாட்கள் முன்பு தயாராக இருந்த நீங்கள் ஏன் திடீரென புதிய கொள்கைகளை கொண்டு கட்சி ஆரம்பிக்கிறீர்கள், ரஜினியின் வழியில் செல்லலாமே என கேட்டததற்கு நான் ரஜினிக்கு டூப்பாக இருக்க மாட்டேன், உங்கள் வீட்டில் நீங்கள் வைக்கும் சாம்பாருக்கும் உங்கள் அம்மா வைக்கும் சாம்பாருக்கும் வித்தியாசம் உண்டல்லவா என்றார். ஆட்டோ சின்னம் பயன்படுத்துவீரா என கேட்டதற்கு ஆட்டோவில் சென்று வேண்டுமானால் வாக்கு கேட்பேன்” என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய அர்ஜுனமூர்த்தி, “நிறைய மாற்று சிந்தனைகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் அதை வழி நடத்தி செல்ல வேண்டியது யார் என்ற கேள்வி உள்ளது. ஏற்கனவே ஆளுமைகள் பல உள்ள நிலையில் நான் என்ன சாதிக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். என் குடும்பத்தினரும் கேட்டனர். இதற்கு தொலை நோக்கு பார்வை வேண்டும். 60 ஆண்டுகள் ஒரு முறை தமிழகத்தில் ஒரு சுழற்சி வரும். அதற்கான நேரம் வந்து விட்டது.

கோவிட் காரணமாக நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு தலைவர் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் யார் என்று உங்களால் கண்டறிய முடியவில்லை. அது குறித்து 40-50 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பல காலம் நிறைவேற்ற முடியாததை இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி சாதித்தனர். 4.5 கோடி வாக்காளர்கள் 18-49 வயதானவர்கள் தமிழ்நாட்டில். அவர்கள் பழமைவாதிகளாக இருக்க வாய்ப்பில்லை. பழைய சிந்தாந்தத்தை நம்புகிறவர்களாக இருக்க மாட்டார்கள்.

மனிதரை மனிதராக பார்க்கும் அரசு அமைக்க வேண்டும். நாம் உண்மையான சுதந்திரத்தில் தற்போது இல்லை. பழைய சித்தாந்தம் பழுதடைந்து விட்டது. அது வெறும் கோயில். மூலவருக்கு அங்கு வேலை இல்லை. ஒரு அரசியல் கட்சி நிறுவ வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. நேர்மையான தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுவேன். ரஜினிக்கு டூப்பாக நான் இருக்க மாட்டேன்.நான் வளர்ந்த காலத்தில் எல்லா மதத்துக்கும் இடம் இருந்தது. அதை சிதையவிடாமல் காப்பாற்ற நான் பங்காற்றுவேன். ரஜினி ரசிகர்கள் என் மீது நம்பிக்கை இருந்தால் வரவேற்போம். மன பேதத்தை உண்டு பண்ணும் எந்த நடவடிக்கையும் செய்ய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்

First published:

Tags: Actor Arjun, BJP, Rajinikanth politics