ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுனாமூர்த்தி வரும் 27ம் தேதி புதிய கட்சி தொடக்கம்?

ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுனாமூர்த்தி வரும் 27ம் தேதி புதிய கட்சி தொடக்கம்?

ரஜினிகாந்த் - அர்ஜூன மூர்த்தி

ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுனாமூர்த்தி வரும் 27ம் தேதி தனது புதிய கட்சியை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
ரஜினி ஆரம்பிக்க இருந்த புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி விரைவில் புதிய கட்சி தொடங்க  இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
ரஜினி கட்சி துவங்கவில்லை என வருத்தத்தில் உள்ள ரசிகர்களை ஒன்றிணைக்கவா இந்த முயற்சி என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது ரஜினி ரசிகர்கள் தனது கட்சியில் இணைந்தே ஆகவேண்டும் என்று நிர்பந்தம் செய்ய மாட்டேன். அவர்களாக வந்தால் மகிழ்ச்சி எனவும் கூறினார் அர்ஜினமூர்த்தி.

குறிப்பாக ரஜினி போன்ற முக்கிய நபர்கள் கட்சி துவங்கும்போது பல்வேறு திட்டங்கள் வைத்திருந்தேன். ஆனால் அவை செயல்படுத்த முடியாத நிலையில் நானே புதிய கட்சி துவங்கி மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புவதாக கூறினார்.

பா.ஜ.கவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த  அர்ஜூனமூர்த்தி பல்வேறு செயல் திட்டத்தை செய்தார். 100 நாட்களில் 100 திட்டம் என பாஜகவில் பணியாற்றினார்.
இதை பார்த்துதான், ரஜினி தான் ஆரம்பிக்க இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். ரஜினிகாந்த், கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக கட்சி தொடங்குவது என்ற முடிவில் இருந்து பின்வாங்கினார்.

இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவரை நம்பி வந்த அர்ஜுனமூர்த்தியும் என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்தகட்ட யோசனையில் இறங்கினார். பின்னர் கட்சி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என செய்தியாளர்களை அழைத்து கூறிய அர்ஜுனமூர்த்தி உடனடியாக டெல்லி சென்று தனது வழக்கறிஞர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒரு வழியாக கட்சி பதிவை முடித்து இந்த தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதாவது பிப்ரவரி27ம் தேதி கோட்டூர்புரம் பகுதியில் கட்சி அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே புதிய கட்சி துவங்கினால் எத்தனை இடங்களில் போட்டி யார் ஆதரவுடன் கட்சியை நடத்துவார். ரஜினிகாந்த் ஆதரவு தருவாரா என்பது குறித்து விரைவில் அர்ஜுனா மூர்த்தி தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:

சிறந்த கதைகள்